21. இந்த அதிகாரத்தின் அபிப்பிராயத்தைக் தொகுத்துக் காட்டுந் தன்மை யாவது: மனுஷன் சேசுக்கிறீஸ்துநாதரைப்பற்றிய விசுவாசத்தினாலே இலவசமாய் நீதிமானாக்கப்படுகிறானென்று மூன்றாம், நாலாம் அதிகாரங்களில் அர்ச். சின்னப்பர் போதித்தபிறகு அப்படிப்பட்ட நீதியின் மேன்மையையும் பிரயோஜனத்தையும் இதிலே காட்டுகிறார். 1-வது, நம்முடைய இரட்சகராகிய சேசுக்கிறீஸ்துநாதருடைய பேறுபலன்களினாலே சர்வேசுரனோடு சமாதானமாய்ப் போகிறோம். 2-வது, நாம் சர்வேசுரனுக்குப் பிள்ளைகளாகிறதுந்தவிர, அவர் தம்முடைய பிள்ளைகளுக்குக் கொடுக்கும் நித்திய பாக்கியத்தை அடைவோமென்றும் நம்பிக்கையாயிருக்கிறோம். 3-வது, கஸ்தி துன்பங்கள் அந்தப் பாக்கியத்துக்கு வழியாயிருப்பதால், அவைகளிலே சந்தோஷப்படுகிறோம். 4-வது, அந்த நம்பிக்கையின் முகாந்தரமேதென்றால், நாம் இன்னும் பாவிகளாயிருக்கையிலே சேசுக்கிறீஸ்துநாதர் நமக்காகப் பாடுபட்டு மரித்திருக்க, அவருடைய திரு இரத்தத்தினால் நாம் நீதிமான்களாக்கப்பட்டபிறகு, எவ்வளவோ அதிகமாய்த் தேவ கோபாக்கினையினின்று நம்மை இரட்சித்து, நித்திய சீவியத்தைக் கொடுப்பாரென்பதாம். 5-வது, சேசுக்கிறீஸ்நாதராலே நமக்குப் பெறுவிக்கப்பட்ட நீதியின் அவசரத்தையும், மேன்மையையுங் காண்பிக்கத்தக்கதாக நம்முடைய கேட்டுக்குக் காரணமாயிருந்த ஆதாமையும், நம்முடைய இரட்சணியத்துக்குக் காரணமாயிருந்த சேசுக்கிறீஸ்துநாதரையும் ஒருவர்க்கொருவரை எதிராகக் காண்பித்து, முந்தின ஆதாம் எல்லா மனிதருடைய கேட்டுக்குக் காரணமாயிருந்ததுபோல, இரண்டாம் ஆதாமாகிய சேசுக்கிறீஸ்துநாதர் எல்லா மனிதருடைய இரட்சணியத்துக்குங் காரணமாயிருக்கிறார் என்கிறார். பின்னும் முந்தின ஆதாமுக்கும் 2-ம் ஆதாமாகிய சேசுக்கிறீஸ்துநாதருக்கும் உள்ள வேற்றுமைகளைத் தொகுத்துக் காட்டி, ஆதாம் ஒரே பாவத்தை நமக்குக் கொடுத்திருக்க, சேசுக்கிறீஸ்துநாதர் அந்த ஜென்மப்பாவத்தினின்றுமாத்திரமல்ல, சகலமான பாவங்களினின்றும் நம்மை இரட்சித்தாரென்றும், ஆதாம் தனது பாவத்தால் நம்மிடத்தில் ஜென்ம நீதியை அழித்துப்போட்டிருக்க, சேசுக்கிறீஸ்துநாதர் அந்த ஜென்ம நீதியிலும் மிகவும் மேன்மையான நீதியையும், சகலமான நன்மைகளையும் நமக்குப் பெறுவித்தாரென்றும் விஸ்தரித்துக் காண்பிக்கிறார். அப்படியிருக்க, ஆதித்தகப்பனால் உண்டாக்கப்பட்ட ஜென்ம நீதியின் அந்தஸ்தைப் பார்க்கிலும், சேசுக்கிறீஸ்துநாதராலே இரட்சிக்கப்பட்டவர்களாயிருக்கிற நம்முடைய அந்தஸ்து அதிக மேன்மையாயிருக்

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save