23. மீளவும் சம்பவித்ததேதெனில், ஆண்டவர் ஓய்வுநாளில் விளை நிலங் களின் வழியாய்ப் போகும்போது, அவருடைய சீஷர்கள் முன் நடந்து கதிர் களைக் கொய்யத் தொடங்கினார்கள். (மத். 12:1-8; லூக். 6:1-5.)
24. அப்போது பரிசேயர் அவரை நோக்கி: இதோ ஓய்வுநாளில் செய்யத் தகாததை இவர்கள் செய்வானேன்? என்றார்கள். (உபாக. 23:25.)
25. அதற்கு அவர்: தாவீதென்ப வர் தமக்கு அவசியமாயிருக்கும்போது, தாமும் தம்மோடிருந்தவர்களும் பசியா யிருந்தபோது என்னசெய்தாரென்றும்,
26. பிரதான ஆசாரியனாகிய அபியத்தர் காலத்திலே அவர் எப்படித் தேவாலயத்தில் பிரவேசித்து, ஆசாரியர்களேயன்றி வேறொருவரும் புசிக்கத்தகாத (தேவ) சமுகத்து அப்பங்களைத் தானும் புசித்து, தன்னோடிருந்தவர்களுக்கும் கொடுத்தாரென்றும் நீங்கள் ஒருபோதும் வாசித்ததில்லையோ? என்றார். (1 அரச. 21:6; லேவி. 24:9.)
* 26-ம் வசனத்துக்கு மத். 12-ம் அதி. 4-ம் வசனத்தின் வியாக்கியானத்தைக் காண்க.
27. மேலும் அவர் அவர்களுக்குச் சொன்னதாவது: ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டதேயன்றி, மனுஷன் ஓய்வுநாளுக்காக உண்டாக் கப்பட்டவனல்ல.
* 27. ஓய்வுநாள் மனுஷனுக்காக உண்டாக்கப்பட்டதென்பதின் கருத்தேதெனில், மனிதன் ஆறுநாள் உழைத்து வேலைசெய்தபின், ஒருநாள் இளைப்பாறி சரீரப் பெலனைக் காப்பாற்றவும், அந்த நாளில் ஆத்தும நன்மைக்காகச் சர்வேசுரனுக்கு ஊழியஞ் செய்யவும் அந்த நாள் எற்படுத்தப்பட்டிருக்கிறதென்பதாம்.
28. ஆதலால் மனுமகன் ஓய்வுநாளுக்கும் ஆண்டவராயிருக்கிறார்.