15. முந்தின உடன்படிக்கையின் காலத்தில் செய்யப்பட்ட குற்றங்களிலிருந்து மக்களை விடுவிக்கக் கிறிஸ்து இறந்தார். இங்ஙனம் சாவொன்று நிகழ்ந்துள்ளதால், அழைக்கப்பட்டவர்கள் புதிய உடன்படிக்கையால் வாக்களிக்கப்பட்ட முடிவில்லா உரிமையைப் பெற முடிந்தது. இவ்வகையில் அவர் புதிய உடன்படிக்கையின் இணைப்பாளராக இருக்கிறார்.