12. உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கற்பித்தபடியே சாபத் நாளை அர்ச்சிக்கத்தக்கதாக நினைக் கக் கடவாய்.
13. ஆறு நாளும் உழைத்து உன் வேலையெல்லாஞ் செய்வாய்.
14. ஏழாம் நாளோ சாபத், அதாவது: உன் தேவனாகிய கர்த்த ருடைய ஓய்வு நாளாமே; அதிலே நீயானாலும், உன் குமாரன், உன் குமாரத்தியானாலும், உன் வேலைக் காரன், உன் வேலைக்காரியானா லும், உன் மாடு உன் வேசரி உனக் கிருக்கிற வேறெந்த மிருகமானாலும், உன் வாசலினுள்ளிருக்கிற அந்நிய னானாலும் யாதொரு வேலையுஞ் செய்ய வேண்டாம். நீ இளைப் பாறுவது போல் உன் வேலைக் காரனும் உன் வேலைக்காரியும் இளைப்பாற வேண்டும் (ஆதி.2:2; யாத்.20:10; எபி.4:4).