1. கோத்திரங்களின் நாமங்களா வன: வடதிசை எல்லை துவக்கி ஆமாட்டுக்குப் போகிறாப்போல எத்தாலோன் வழியின் ஓரத்துக்கும், ஏனான் முற்றத்திலிருந்து ஏமாட் டுக்குப் போகிறாப்போலே வடக்கே யிருக்கிற தமாஸ்குவின் எல்லைக்கும், இவைகளுக்குள்ளிருக்கிற தேசம், கீழ்த்திசை துவக்கி மேல் திசைமட் டும், தான் கோத்திரத்துக்குச் சொந்த மாகும்; இது ஒரு பங்கு.
2. தானின் எல்லை அருகே கீழ்த் திசைமுதல் சமுத்திரம் வரைக்கும் உள்ள நாடு ஆசேருக்குச் சொந்த மாகும்; இதுவும் ஒரு பங்கு.
3. ஆசேருடைய எல்லையருகே கீழ்த்திசை முனை துவக்கிக் கடல் முனை மட்டும் உள்ள நாடு நெப் தாளி கோத்திரத்துக்குச் சொந்த மாகும்; இதுவும் ஒரு பங்கு.
4. நெப்தாளி எல்லையருகே கீழ்த் திசை முனை துவக்கிக் கடல் முனை வரையிலும் உள்ள நாடு மனாசே கோத்திரத்துக்குச் சொந்தமாகும்; இதுவும் ஒரு பங்கு.
5. மனாசேயின் எல்லையருகே கீழ்த்திசையிலிருந்து சமுத்திரம் மட்டுமுள்ள நாடு எப்பிராயீமுக்குச் சொந்தமாகும்; இதுவும் ஒருபங்கு.
6. எப்பிராயீமின் எல்லை பிடித் துக் கீழ்த்திசை முதல் கடல் நாடு வரையிலுமுள்ள நாடு ரூபனுக்குச் சொந்தமாகும்; இதுவும் ஒரு பங்கு.
7. ரூபனுடைய எல்லையருகே கீழ்த்திசை முதல் கடலோர மட்டு முள்ள நாடு யூதாவுக்குச் சொந்த மாகும்; இதுவும் ஒரு பங்கு.
8. யூதாவின் எல்லையருகே கீழ்த் திசை துவக்கிக் கடலோரம் வரைக் கும் உள்ள நாடோ நீங்கள் (கர்த்த ருக்கு) அற்பிதஞ் செய்யவேண்டிய பங்கு; அது மற்றுமுள்ள ஒவ்வொரு பங்குபோல் கீழ்த்திசை துவக்கிக் கடலோரமட்டும் நீளத்திலும், அகலத் திலும் இருபத்தையாயிரங் கோலா யிருக்கும்; பரிசுத்த ஸ்தலம் அதன் நடுவிலிருக்கும்.
9. கர்த்தருக்கு நீங்கள் (விசேஷ) அற்பிதமாக்கவேண்டிய நிலம் இருபத்தையாயிரங் கோல் நீளமும், பதினாயிரங் கோல் அகலமுமா யிருக்கும்.
10. இந்தப் பரிசுத்த பங்கு, அதா வது: வடக்கே இருபத்தையாயிரங் கோல் நீளமும், கடல்புறத்தில் பதினா யிரங் கோல் அகலமும், கிழக்கே பதி னாயிரங் கோல் அகலமும், தெற்கே இருபத்தையாயிரங் கோல் நீளமு மாகிய அந்த நிலம் பரிசுத்த ஸ்தலத் துக் குருமார்களுடையதாகும்; கர்த் தருடைய பரிசுத்த ஸ்தலம் அதன் நடுவிலே இருக்கும்
11. இஸ்ராயேல் புத்திரர் வழி தப்பித் தப்பறையான மார்க்கத்தில் நடந்தபோதும், லேவியரும் முதலாய் வழி தப்பித் தப்பறையான மார்க் கத்தில் போனபோதுஞ் சாதோக்கின் புத்திரர் வழி தவறிப்போகாமல் நமது நீதி ஆசார முதலிய திருச்சடங்கு களைக் கைக்கொண்டு ஆசரித்தபடி யால் பரிசுத்த ஸ்தலமே அவர்களுக்கு உரித்தாயிருக்கும்.
12. தேசத்தின் சகல பங்குகளிலுஞ் சிறந்த பங்காகிய (கர்த்தருடைய) மகா பரிசுத்த ஸ்தலமே அவர்களு டையதாயிருக்கும்; அது லேவி யர்களின் எல்லையருகே இருக்கும்.
13. ஆசாரியர்களுடைய எல்லைக்கு அடுத்தாப்போலே,லேவியர்களுக்குஇருக்கவேண்டிய பங்கு இருபத் தையாயிரங் கோல் நீளமும், பதினாயிரங் கோல் அகலமுமா யிருக்கும்; (ஆம்!) நீளம் முழுதும் இருபத்தையாயிரங் கோலும், அகலம் முழுதும் பதினாயிரங் கோலுமாக வேண்டியது.
14. அவர்கள் அந்நிலத்திலே ஒன்றை யும் விற்கலாகாது; ஒன்றையும் மாற்ற லாகாது; ஒன்றையும் மற்றவர்களுக் குக் கொடுக்கலுமாகாது; ஏனெனில், அவை அனைத்துங் கர்த்தருக்குப் பரிசுத்தமானதென்று நேர்ந்திருக் கின்றன.
15. இருபத்தையாயிரங் கோல் அகலத்துக்கு மிச்சமாயிருக்கிற ஐயாயிரங் கோல் நிலமோ பரிசுத்த மாகாமல் நகரத்துக் குடியிருப்புக் கும், இதன் வெளி நிலம் தோட்டங் களுக்கும் விடப்படும்; நகரம் அதன் நடுவாந்தரத்திலே கட்டப்படுவதாக.
16. அதின் அளவுகளாவன: வட புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலும், தென்புறத்திலே நாலா யிரத்தைந்நூறு கோலும், கீழ்புறத் திலே நாலாயிரத்தைந்நூறு கோலும் மேல்புறத்திலே நாலாயிரத்தைந்நூறு கோலுமாயிருக்கும்.
17. நகரத்தின் வெளி நிலங்களோ, வடக்கே இருநூற்றைம்பது கோலும், தெற்கே இருநூற்றைம்பது கோலும், கிழக்கே இருநூற்றைம்பது கோலும், மேற்கே இருநூற்றைம்பது கோலுமாய் இருக்கவேண்டும்.
18. நீளத்திலே, பரிசுத்த ஸ்தலத் திற்கு அற்பிதமாக்கப்பட்ட பங்குக்கு மீதியாயிருக்கிற கிழக்கே பதினா யிரங் கோலும், மேற்கே பதினாயிரங் கோலுமானது, பரிசுத்த ஸ்தலத்துக்கு ஆரம்பமான சொத்தாகவே இருக்கும்; அதின் வருமானம் நகரத் துப் பணிவிடைக்காரருக்கு ஆகார மாகவிருக்கும்.
19. நகரத்து வேலை செய்ய வேண்டியவர்கள் இஸ்ராயேலின் எல்லாக் கோத்திரங்களிலுமிருந்தே நியமிக்கப்படுவார்கள்.
20. அற்பித நிலம் முழுவதுஞ் சதுர மான இருபத்தையாயிரங் கோல் நீளமும், இருபத்தையாயிரங் கோல் அகலமுமாயிருக்கும்; அதிலே பரிசுத்த ஸ்தலத்துப் பங்கும், பட்ட ணத்துக் காணியாட்சியான பங்கும், இவ்விரு பங்குளாகப் பிரிக்கப்படும்.
21. பரிசுத்த ஸ்தலத்திற்கும், நகரத் துக்குங் காணியாட்சியான பங்கின் நான்கு புறத்திலும், கீழ்த்திசை முனை வரையில் இருபத்தையாயிரங் கோலும், சமுத்திர திசையிலே கடல் முனை வரைக்குமுள்ள இருபத்தை யாயிரங் கோலும் போக, மீதியான பூமியெல்லாம் அதிபனுடைய பங்கா கும்; பரிசுத்த ஸ்தலத்தின் பங்கும், தேவாலயத்தின் அர்ச்சிக்கப்பட்ட ஸ்தானமும் அதன் நடுவிலிருக்கும்.
22. அதிபதியினுடைய பங்கின் நடுவேயிருக்கும் லேவியர்களுக்கு அற்பிதமான பங்கிலேயும், நகரத் துக்குக் குறிக்கப்பட்ட பங்கிலேயும், யூதா பென்ஜமீன் இவர்களுடைய எல்லைகளுக்குள்ளேயிருக்கிற நிலங் களும் அதிபதிக்கு அற்பிதமாக்கப் படும்.
23. மற்றக் கோத்திரங்களுக்கு உண்டாகும் பங்குகளாவன: கீழ்த் திசை துவக்கி மேல்திசை மட்டும் பென்ஜமீனுக்கு ஒரு பங்கு இருக் கும்.
24. பென்ஜமீன் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேல்திசை வரை யில் சிமேயோனுக்கு ஒரு பங்கு இருக்கும்.
25. சிமேயோனின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேல்திசை பரியந் தம் இசக்காருக்கு ஒரு பங்கு இருக்கும்.
26. இசக்காரின் எல்லையருகே கீழ்த்திசை துவக்கி மேல்திசை வரைக் கும் ஜாபுலோனுக்கு ஒரு பங்கு இருக்கும்.
27. ஜாபுலோனின் எல்லையருகே கீழ்த்திசை முதல் கடலோரம் ஈறாகக் காதுக்கு ஒரு பங்கு கிடைக்கும்.
28. காதுடைய எல்லையருகே தென்முனை மாகாணமாகிய தெற் கிலுள்ள தாமார் துவக்கிச் சச்சரவின் தண்ணீர்களாகிய காதேஸ் வரை யிலுமே அது பெரிய சமுத்திரத்துக்கு நேர்முகமாயிருக்கிற காணியாட்சி.
29. நீங்கள் சுதந்தரிக்கத்தக்கதாக இஸ்ராயேல் கோத்திரங்களுக்குள் சீட்டுப்போட்டுப் பங்கிடவேண்டிய தேசம் அதுவாம் என்கிறார் தேவ னாகிய கர்த்தர்.
30. நகரத்தினின்று வெளிப் போவதற்கான வழிகளேதெனில்; வடதிசையிலிருந்து நாலாயிரத்து ஐந்நூறுகோல் அளந்துவைப்பாய்.
31. நகரத்தின் வாசல்கள் இஸ் ராயேலின் கோத்திரங்களுடைய நாமங்களின்படியே பெயர் பெறும்; வடக்கே ரூபனின் வாசல் ஒன்று; யூதாவின் வாசல் ஒன்று லேவியின் வாசல் ஒன்று.
32. கீழ்த்திசையிலிருந்து நாலாயிரத்து ஐந்நூறு கோல் அளந்து வைப்பாய்; அங்கு மூன்று வாச லிருக்கும்; யோசேப்பின் வாசல் ஒன்று; பென்ஜமீன் வாசல் ஒன்று; தானின் வாசல் ஒன்று.
33. தென்திசையிலிருந்து நாலா யிரத்து ஐந்நூறு கோல் அளந்து வைப்பாய்; அங்கு மூன்று வாசலிருக் கும்; சிமேயோனின் வாசலொன்று; இசக்காரின் வாசலொன்று; ஜாபு லோன் வாசலொன்று.
34. மேல்திசையிலிருந்து நாலா யிரத்து ஐந்நூறு கோல் அளந்து வைப்பாய்; அங்கு மூன்று வாசல் இருக்கும்; காதின் வாசல் ஒன்று; ஆசேரின் வாசலொன்று; நெப்தாளி யின் வாசல் ஒன்று.
35. அந்நகரத்தின் சுற்றளவு பதினெண்ணாயிரங் கோலாம்; அந் நாள் முதல் நகரமானது: ""அதனுடன் கர்த்தர் இருக்கிறார்'' என்றே அழைக் கப்படும்.

சத்திய வேத ஆகமம் 1929

Note: Double click on the verse to align the compared verses in the same line


Notes
Cancel   Save